அடுத்த இரு வாரங்களுக்குள் ஆறு இலட்சம் ஸ்பூட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் – ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி நம்பிக்கை!

Wednesday, May 12th, 2021

ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கோவிட் தடுப்பூசியின் 600,000 டோஸ் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கும் என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ஸ்பூட்னிக் வி தடுப்பூசி மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய தடுப்பூசி என சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு பாதுகாப்பாக வைக்கப்பட்ட தடுப்பூசியை வெளியே எடுத்து இரண்டு மணி நேரத்திற்குள் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 15 ஆயிரம் தடுப்பூசிகளில் 11,334 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், குறித்த அறிக்கைகள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இரண்டு வாரங்களில் மேலும் 600,000 டோஸ் ஸ்பட்னிக் வி தடுப்பூசிங்களை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் என்றும் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: