அச்செழு அ.மி.த.க. பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பரிசில்களை வழங்கிவைத்தது ஈ.பி.டி.பி!

Friday, January 15th, 2021

யாழ்ப்பாணம் அச்செழு அ.மி.த.க. பாடசாலையில் கல்வி கற்று புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாகத்தினரால் உதவித்திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வறிய மாணவர்களை அதிகமாக கொண்ட குறித்த பாடசாலையில் கற்று சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்க வேண்டும் என  பாடசாலை முதல்வர் K. குகதாசன் அவர்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலிகிழக்கு நிர்வாக செயலாளர் ஐங்கரன் இராமநாதனிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு இணங்க 2020 ஆம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி கிழக்கு நிர்வாகத்தினர் பாராட்டி கௌரவித்துள்ளதுடன் அவர்களுக்கு உதவிகளையும் வழங்கிவைத்துள்ளனர்.

இதனடிப்படையில் அதிகூடிய புள்ளியை பெற்ற மாணவி சத்தியநாதன் சஸ்வினிக்கு துவிச்சக்கர வண்டி ஒன்று அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.  அத்துடன் சித்தியடைந்த மகிழினி, சோபிதா, கவின்சன் ஆகிய மாணவர்களுக்கு ஒருதொகை நிதியும் ஊக்குவிப்பாக வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: