8 இலட்சம் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்க ஏற்பாடு – பாடசாலைக் கல்வியையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, November 17th, 2023

உலகின் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் வகையில் பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகைியில் –

பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்க்கிறோம். உலகம் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் போது நமது பிள்ளைகளின் கல்வித் தேவையை தாமதப்படுத்த முடியாது. அதற்கு அவசியமான கல்வி மறுசீரமைப்புக்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

2024 இற்கான புத்தங்கள் தற்போதும் அச்சிடப்பட்டுள்ளன. சீருடைகள் அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும். அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

யுனெஸ்கோவுடன் இணைந்து 8 இலட்சம் மாணவர்களுக்கு பாதணி கூப்பன்களைப் பகிர்ந்தளிக்கவுள்ளோம்.  அரசாங்கத்தின் நிதியை மாத்திரம் பயன்படுத்தாமல் பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளைப் பெற்றுக்கொடுப்போம்.

அத்துடன் யார் கல்வி அமைச்சராக இருந்தாலும் 4 வருடங்களுக்குள் அந்த உதவிகள் நாட்டுக்கு கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: