5 இந்திய மீனவர்கள்  கைது!

Sunday, July 3rd, 2016

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

அத்துடன் அவர்கள் மீன்பிடியில் ஈடுப்பட்ட படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இந்திய மீனவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படைப் பேச்சாளர் கூறினார்.

கைதுசெய்யப்பட்ட 5 மீனவர்களையும் யாழ்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: