2016இல் மழை வீழ்ச்சி மிகக் குறைவு!

Monday, January 2nd, 2017

கடந்த 6 ஆண்டுகளில் 2ஆவது மிகக் குறைந்த மழை வீழ்ச்சி பதிவாகிய ஆண்டாக 2016ஆம் ஆண்டு அமைந்துள்ள என்று வலிமண்டலவியல் திணைக்கப் பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டை விட 820 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கடந்த ஆண்டு குறைவடைந்துள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறான அதிகளவிலான வித்தியாசம் இரு ஆண்டுகளுக்கு இடையில் காணப்பட்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு முழுவதும் 1010.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியே கிடைக்கப் பெற்றுள்ளது. நவம்பர் மாதத்தில் அதிகளவிலான மழை பெய்துள்ளது.

யாழ்.மாவட்டத்தில் 2012ஆம் ஆண்டே, கடந்த 6 ஆண்டுகளில் மிகமோசமான மழை வீழ்ச்சி பதிவாகியது. அந்த ஆண்டு 943.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி மாத்திரமே கிடைக்கப்பெற்றிருந்தது. ஏனைய ஆண்டுகளில் 1500 மழை வீழ்ச்சி அண்ணளவாக கிடைக்கப்பெற்றுள்ளது.

2010ஆம் ஆண்டு 1,496.5மில்லிமீற்றரும், 2011 ஆம் ஆண்டு 1,470.7மில்லி மீற்றரும் 2013ஆம் ஆண்டு 1,033மில்லிமீற்றரும், 2014ஆம் ஆண்டு 1,368 மில்லிமீற்றரும், 2015ஆம் ஆண்டு அதிகபட்சமாக 1,838 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் கிடைக்கப்பெற்றிருந்தது. என்று வலிமண்டலவியல் திணைக்கப் பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

rain-generic_650x400_71457950721

Related posts: