20 ரூபாய் திருடியதால்  ஒரு வருட சிறை!

Wednesday, August 24th, 2016

தெவட்டகஹ முஸ்லிம் பள்ளிவாயலில் உண்டியலில் இருந்து 20 ரூபாய் பணத்தை திருடியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பலபிடிய ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த மொஹமட் பாரூக் நிலாம் என்பர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கறுவாத்தோட்டப் பொலிஸாரினால் வழக்குக்குச் சாட்சியாக 10 ரூபா நாணயத்தாளும், குற்றியொன்றும் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டது. மேலும் நான்கு பேர் சாட்சியாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சிறைத் தண்டனை 10 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:


"ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு " – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ...
தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படங்களை செயன்முறைக்கு உட்படுத்துவதற்கான கட்டணம் அதிகரிப்பு – வர்த்தமான...
யாழ் போதனா வைத்தியசாலையில் 10 மாடியுடன் கூடிய புதிய கட்டடம் தொகுதி - நிர்மாணிக்கஏற்பாடுகள் இடம்பெற்...