19 ஆவது திருத்தச் சட்டம் ஒரு வெடிகுண்டு : 20 ஆவது திருத்தம் நிறைவேறும் – அதனால் தேசிய பாதுகாப்பிற்கு எதுவித பாதிப்பும் ஏற்பட்டது – நாடாளுமன்றத்தில் பிரதமர் சூளுரை!

Wednesday, October 21st, 2020

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் குந்தகமம் ஏற்பட்டது என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச 20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எதுவித பாதிப்பும் ஏற்பட்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் போது 19 ஆவது திருத்தச் சட்டத்தினால் நாடு எதிர்நோக்கிய நெருக்கடி நிலைமைகளை கண்கூடாக பார்க்கக் கிடைத்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தச் சட்டம் ஒரு வெடிகுண்டு என அதனை கொண்டு வந்தவர்களும் கூறியிருந்தனர் எனவும் முன்னாள் ஜனாதிபதியும் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பாதக விளைவுகளை வெளிப்படுத்தியிருந்தார் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த அரசாங்கம் மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் 19 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்ததாகவும் அதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டம் பூரண அளவில் அனைத்து தரப்பினரதும் ஜனநாயக உரிமைகளை மதித்தே இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்குவும் தேசிய பாதுகாப்பினை உறுதி செய்யவுமே இம்முறை தேர்தலில் மக்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கோரியதாகவும் மக்கள் அந்த ஆணையை தற்போது தமக்கு வழங்கியதாகவும் இதன் அடிப்படையில் 20அவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுகின்றது என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: