14 வர்த்தகர்களுக்கு அபராதம்!

Thursday, March 24th, 2016

மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக

நிலையங்களில் காலாவதியான  பொருட்களை விற்பனை செய்த 14

வர்த்தகர்களுக்கு 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதன்கிழமை (23)

மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன் தீர்ப்பளித்ததாக பாவனையாளர்

அலுவல்கள் அதிகாரசபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன்

வசந்தசேகரன் இன்று (24) தெரிவித்துள்ளார்.

இவ் 14 வர்த்தக நிலையங்களில் இரண்டு சுப்பர்மார்கெட் எனவும் அவர்

குறிப்பிட்டார். குற்றம் சாட்டப்பட்ட வர்த்தகர்கள் தங்கள் குற்றத்தை

ஏற்றுக்கொண்டதை அடுத்து நீதவான்

எச்சரிக்கை செய்து அபராதம் விதித்தார்.

Related posts: