05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது சொத்து விபரங்களை பொதுமக்களுக்காக முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரலாற்றில் முதன் முறையாக, குறித்த 05 நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், தாரக பாலசூரிய, விதுர விக்கிரமநாயக்க, எரான் விக்கிரமரத்ன மற்றும் வாசுதேவ நாணனயக்கார ஆகியோரே தாமாகவே முன்வந்து, தமது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
இது ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இதனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது சொத்து விபரங்களை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
குறுநாடக ஆக்கப் போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாமிடம்!
நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம் - அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் ...
எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை திறப்பதற்கு தீர்மானம்!
|
|