மடுமாதா ஆலயத்துக்குள் விசேட பாதுகாப்பு !
Saturday, August 10th, 2019மன்னார் மடுமாதா ஆலயத்தின் வருடாந்த திருப்பலி உற்சவம் தொடர்பான பாதுகாப்பு பணிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மடுமாதா ஆலயத்தின் வருடாந்த திருப்பலி உற்சவம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதுடன் எதிர்வரும் 15ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஏராளம் பக்தர்கள் மடுமாதா ஆலயத்தின் திருப்பலி உற்சவத்தில் கலந்து கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பக்தர்களின் வாகனங்களை ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளும் பொலிசாரினால் மேற்கொள்ளப்படுவதுடன், அவர்களுக்கு உதவியாக இராணுவத்தினரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதே நேரம் மடுமாதா ஆலயத்துக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களும் தீவிர பரிசோதனையின் பின்னரே ஆலயத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|