ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு 8.5 மில்லியன் யூரோ வழங்க தீர்மானம்!

Friday, August 16th, 2019


பிரதான மூன்று முக்கிய நோக்கங்களுக்காக இலங்கைக்கு 8 தசம் 5 மில்லியன் யூரோவை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்ப வழங்கும் நோக்கில் ,இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் நிலவும் பிரிவினைவாத தீவிரவாதத்தை ஒழிப்பதற்கும், சமூக எதிர்வினை செயற்பாடுகளை ஊக்கப்படுத்தவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கும் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக்மரபன மற்றும் ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவர் பெட்ரிகா மொகெரினி ஆகியோருக்கு இடையில் இந்த மாத ஆரம்பத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைப்பெற்றிருந்தது.

அதன் பின்னரே இந்த உதவித் தொகையை வழங்க தீர்மானிததாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற பயங்கரவாத தாக்குதல்களைத் தடுப்பது மற்றும் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டை வழங்குவது போன்ற சவால்களை இலங்கை எதிர்கொண்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: