வௌ்ளைச் சீனியின் கட்டுப்பாட்டு விலையை நீக்க அவதானம்!

Thursday, March 9th, 2017

இறக்குமதி செய்யப்படும் வௌ்ளைச் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குவது குறித்து, நுகர்வோர் விவகார அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகச் சந்தையில் சீனிக்கான விலை அதிகரித்துள்ளமை காரணமாக, இது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 27ம் திகதி 1Kg சீனிக்கான கட்டுப்பாட்டு விலை 93 ரூபாவாக நியமித்து விஷேட வர்த்தமானி அறிவித்தலும் வௌியிடப்பட்டது.

எனினும், உலகச் சந்தையில் சீனிக்கான விலை அதிகரித்துள்ளமையால், தற்போது இலங்கை சந்தையில் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக சீனி விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனவே, இறக்குமதியாளர்களை பாதுகாக்கும் நோக்குடன் கட்டுப்பாட்டு விலையை நீக்க தற்போது யேசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது

Related posts: