வீதி சித்திரக் கலைஞர்களுக்கு அங்கீகாரம்?

இலங்கையில் உள்ள வீதிச் சித்திரக்கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு உள்ளுராட்சி மன்ற அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அதற்கமைய கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு அருகில் தங்கள் படைப்புகளுடன் காத்திருக்கும் கலைஞர்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் அடையாள அட்டை வழங்குமாறு உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா கொழும்பு நகர ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பல நேரங்களில் குறித்த சித்திர கலைஞர்கள் பொலிஸாரினால் பிரச்சினைகளை சந்திப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக குறித்த கலைஞர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்குமாறு தெரு சித்திர கலைஞர்களின் சங்கம் அமைச்சிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இவர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் விவகாரம்: இன்றுமுதல் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டம்!
பாதுகாப்பு கடமையிலுள்ள படையினரை பாதுகாக்க உடனடி நடவடிக்கை – வெலிசர கடற்படை முகாம் முற்றாக முடக்கம்!
சித்திரைக்கு முன்னர் இலங்கையில் முதலாவது தடுப்பூசி வழங்கப்படும் - ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்...
|
|