விரைவில் அமைச்சரவையில் மாற்றம்?
Thursday, March 31st, 2016இலங்கை அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று(30)ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் தெரியவருகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்திற்கு முன்பதாக அல்லது அதற்கு பின்னர் இந்த அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.
தற்போது மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சராக பதவி வகிக்கும் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியொன்று வழங்கப்படவுள்ளது.
அத்துடன், பதுளை மாவட்ட ஐ.ம.சு. முன்னணி எம்.பி.யும் முன்னாள் சீனி தொழிற்றுறை அமைச்சருமான லக்ஷ்மன் செனவிரத்னவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்றும் வழங்கப்படவுள்ளதாகவும் அறியவருகிறது.
இதேவேளை வேறு முக்கிய அமைச்சுப் பதவிகளிலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. க்களான மனுஷ நாணயக்கார, கீதா குமாரசிங்க மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது..
Related posts:
|
|