விமான நிலையத்தில் 80 ஆயிரம் சிகரட்டுகளுடன் மூவர் கைது!

Wednesday, August 24th, 2016

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 400 சிகரட் அட்டைப்பெட்டிகளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஹோமாகமயைச் சேர்ந்த 40 மற்றும் 32 வயதான சகோதரிகள் மற்றும் 40 வயதான மாத்தளையைச் சேர்ந்த நபரொருவரும்  அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த மூவரும் டுபாயிலிருந்து இலங்கைக்கு  குறித்த சிகரட் அட்டைப்பெட்டிகளை  கடத்த முயன்றுள்ளனர். சந்தேக நபர்களின் 4 பயணப்பொதியில் இருந்து  80 ஆயிரம் சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்டுள்ள சிகரட்டுகளின் பெறமதி சுமார் 2.8 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

Related posts: