விபத்தில் முதியவர் பலி!

Tuesday, July 26th, 2016

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில்   துவிச்சக்கர வண்டியில் பயணித்த 64 வயதுடைய முதியவர் ஒரவர் பலியாகியுள்ளார்.

இன்று  அதிகாலை 5.35 மணியளவில் பரந்தனை பகுதியில் நடைபெற்ற குறித்த சம்பவத்தில் பரந்தனைச் சேர்ந்த  சண்முகன் என்ற முதியவரே பலியாகி உள்ளார் என தெரியவருகின்றது.

புத்தளத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி  சென்றுகொண்டிருந்த  கார் வாகனம் முன்னால் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த  முதியவருடன்   மோதியதால் விபத்து ஏற்பட்டதாக தெரியவருவதடன் விபத்துக்குள்ளான முதியவர் பலத்த  காயங்களுடன்   கிளிநொச்சி பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த  விபத்தானது  கார்  சாரதி தூங்கியதன் காரணமாகவே    கட்டுப்பாட்டை  இழந்து  முன்னால் சென்ற துவிச்சக்கர வண்டியில்  மோதியதாகவும் கார் சாரதியை   கிளிநொச்சி  பொலிஸார்   கைது செய்து மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்  எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: