விடுவிக்கப்படவுள்ள நிலங்களை அடையாளப்படுத்த உரிமையாளர்களுக்கு அனுமதி!

Sunday, August 28th, 2016

யாழ்.வலிகாமம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து 460 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படவுள்ள நிலையில் அந்த நிலங்களை உரிமையாளர்கள் நேரில் பார்வையிட்டு அடையாளப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்டுள்ள பகுதி காணி உரிமையாளர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு குறித்த பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.வலி.வடக்கில் 233, 234, 235, 236, மற்றும் 250 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 460 ஏக்கர் நிலம் 26 வருடங்களின் பின்னர் இராணுவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே விடுவிக்கப்படவுள்ள காணிகளை பார்வையிடுவதற்கும் அவற்றை நேரில் சென்று அடையாளப்படுத்துவதற்கும் காணி உரிமையாளர்களை அழைத்துச் செல்ல படைத்தரப்பு மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.

விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 5 கிராமசேவகர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகம் முன்பாக ஒன்றுகூடி தங்கள் பகுதி பொறுப்பு கிராம சேவகர்கள் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.5 கிராமசேவகர் பிரிவுகளிலும் விடுவிக்கப்படவுள்ள காணி உரிமையாளர்கள் மட்டுமே இதன்போது அழைத்துச் செல்லப்படுவார்கள். ஏனையவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: