வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் வீதிகளைப்  பொலிஸார் அடாத்தாகக் கையகப்படுத்துகின்றனர்: யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்!

Saturday, July 30th, 2016

வலி. வடக்கில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்கள் பயன்பாட்டு வீதிகள் உள்ளிட்ட சில இடங்களைப் பொலிஸார் மீண்டும் அடாத்தாகக் கையகப்படுத்தியுள்ளனர் எனக்  குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் வீதிகளைப்  பொலிஸார் அடாத்தாகக் கையகப்படுத்துகின்றனர் என மக்கள் எனது கவனத்திற்குக்  கொண்டு வந்துள்ளனர்  இது தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்குக்  கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்தார் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன்.

இன்று சனிக்கிழமை(30) யாழ்ப்பாணம்  இந்துக்கல்லூரியில் நடைபெற்ற  நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதுகாப்பு அமைச்சால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தை பொலிஸார் கையகப்படுத்தமுடியாது. இது மக்களின் இயல்பு நிலையுடன் தொடர்புபட்ட விடயம். அந்தப் பிரதேசத்திலுள்ள வீதிகளைச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பமான பின்னர் பொலிஸார் இந்த விடயத்தில் தலையிடக் கூடாது எனவும் தெரிவித்தார்.

Related posts: