வலி.வடக்கின் சேந்தான் குளம், வலி.தெற்கின்  திருவடி நிலை ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் காணிகளைச் சுவீகரிக்கத் திட்டம்

Tuesday, March 8th, 2016

யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பொதுமக்களின் காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கை வலி.வடக்கின் சேந்தான் குளம், வலி.தெற்கின்  திருவடி நிலை ஆகிய பகுதிகளில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்குப் பொதுமக்களும், அரசியல் வாதிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதற்கமைய வலி.வடக்கின் சேந்தான் குளம் பகுதியில் தேவாலயத்துக்குச் சொந்தமான நான்கு பரப்புக் காணியைக் கடற்படையினரின் தேவைகளுக்காகச் சுவீகரிக்கும் வகையில் இன்றைய தினம் நில அளவைத் திணைக்களத்தினரால் நில அளவை செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று வலி.தெற்கின் சேந்தான் குளம் பகுதியிலும் எதிர்வரும்-10 ஆம் திகதி 11 ஏக்கர் நிலப் பரப்பைச் சுவீகரிக்கும் வகையில் நில அளவைத் திணைக்களத்தினரால் காணிகள் அளவீடு செய்யப்படவுள்ளது. இது தொடர்பில் அரச தரப்பினர் உள்ளிட்ட தரப்பினர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந் நிலையில் குறித்த அளவீடுகளுக்கு எதிராகப் பொதுமக்களும், அரசியல் வாதிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்ற நிலையில் நில அளவை செய்யும் இடங்களில் குறித்த செயற்பாட்டைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசியல் வாதிகளும், பொதுமக்களும் தயாராகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: