வயாவிளான் ஆலய புனரமைப்புக்கு இராணுவத்தினர் அனுமதி!

Thursday, December 22nd, 2016

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்கியுள்ள வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தினை மீள புனரமைப்பு செய்வதற்கு  யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர்  ஜெனரல்மகேஷ் சேனநாயக்க அனுமதி வழங்கியுள்ளதாக ஆலய பரிபாலனசபை தலைவர் ஜெயச்சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

கடந்த திங்கட்கிழமை பலாலி இராணுவ தலைமை அலுவலகத்தில் சிறைச்சாலை மறுசீரமைப்பு, இந்த கலாசார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தலமையில் அவசர கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது முதற்கட்டமாக குறித்த ஆலயத்தினை உயர் பாதுகாப்பு வலயத்தினுள் வைத்து மீள் கட்டுமானம் செய்வதற்கும், அதனூடாக போக்குவரத்து வீதியினை செப்பனிடுவதற்கும் அனுமதி கோரப்பட்டது. மேலும் நாளாந்த வழிபாட்டிற்கு மக்கள் சென்று வருவதற்குரிய வசதியினை செய்து தருமாறும் கட்டளைத் தளபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கைளை கேட்டறிந்து கொண்ட தளபதி வெகுவிரைவில் குறித்த ஆலயத்தினை பார்வையிட்டு அதற்குரிய நடவடிக்கைகளை இராணுவத் தளபதியுடளம் கலந்தாலோசித்து செய்து தருவதாக கூறினார்.

765038575sf5

Related posts: