வடமராட்சி புலோலி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை காவலாளி சடலமாக மீட்பு – பொலிஸார் தீவிர விசாரணை!

Tuesday, June 2nd, 2020

யாழ்ப்பாணம் புலோலி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் இருந்து இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர் அந்தப் பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றி வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

வழமை போன்று நேற்று இரவு கடமைக்கு வந்த நிலையிலையே குறித்த நபர் இன்றையதினம் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட, சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்க்கது.

Related posts: