யாழ்.மாவட்ட மீன்பிடி படகுகளின் பதிவுக்கான காலம் நீடிப்பு!

Friday, October 28th, 2016

யாழ்.மாவட்டத்தில் மீன்பிடி படகுகள் மற்றும் இயந்திரங்களை பதிவு செய்ய தவறியவர்களுக்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளமையால் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் மீன்பிடி அமைச்சினால் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய ரீதியிலான இப்பதிவு நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில்; யாழ்.மாவட்டத்தில் அநேகமான மீனவர்கள் பதிவினை மேற்கொள்ள தவறியிருந்தமை உத்தேசக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதையடுத்தே யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு பதிவு செய்வதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இப்பதிவினை மேற்கொள்ளாத மீனவர்களின் மீன்பிடி படகுகள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படுவதுடன் அமைச்சினால் வழங்கப்படும் மானியங்கள், காப்புறுதி போன்ற நடவடிக்கைகளுக்கு உள்வாங்கப்படமாட்டார்கள் என்பதால் பதிவினை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

 boat1

Related posts:

உயர்தரப் பரீட்சை குறித்து எந்தவொரு மாணவரும் குழப்பமடையத் தேவையில்லை - கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும...
நாடும் பொருளாதாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளமையையிட்டு ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சியடைய வேண்...
மின்சார சபை அடைந்துளு்ள இலாபம் தொடர்பில் அமைச்சர் காஞ்சனவின் கருத்து தவறானது - முன்னாள் மின்சாரத்துற...