யாழ் மாவட்டத்திலுள்ள சிறுகுளங்களை புனரமைக்கும் திட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

Tuesday, April 3rd, 2018

வடக்கு மற்றும் கிழக்கில் சிறு குளங்களை புனரமைத்து நீர்ப்பாசனத்தை வலுப்படுத்தும் விசேட திட்டத்திற்கென ஐந்நூறு மில்லியன் நிதி வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது

இத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 26 சிறு குளங்கள் தெரிவு செய்யப்பட்டு நூறு மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது

இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று யாழ் அராலி பெரிய குளத்தில்  இடம்பெற்றது தேசிய ஒருமைப்பட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான செயலணியின் தலைவியும் முன்னர் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்

Related posts: