யாழ். பல்கலைக்கழக பிரதான உணவகங்கள் இரண்டுக்கும் சீல்!

Thursday, August 24th, 2017

 

யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான உணவகங்கள் இரண்டையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு யாழ். குருநகரிலுள்ள சிறுவர் நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை(24) உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய மேற்பட உணவகங்கள் இரண்டும் இன்று பிற்பகல் பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவகங்களில் பழுதடைந்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டமை மற்றும் உணவகங்களில் வேலை செய்தவர்கள் சுகாதார விதிமுறைகளுக்கு மாறாகக் காணப்பட்டமை  ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் யாழ்.பல்கலைக் கழகத்துக்குப் பொறுப்பாகவுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கமையவே உணவகங்கள் இரண்டும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: