யாழ். நெடுந்தீவுக்  கடற்பரப்பில் கைதான 12 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் 

1_VCXM Wednesday, September 13th, 2017
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  நேற்று இரவு  12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான மீனவர்களிடமிருந்து  இரண்டு இழுவைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறித்த மீனவர்கள் அனைவரும் காங்கேசன்துறைக் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்னர் இன்று  செவ்வாய்க்கிழமை(12) காலை  யாழ். மாவட்டக் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த மீனவர்கள் அனைவரும் இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது எதிர்வரும்- 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!