யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வர் விடுதலை!

வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை( 10) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.பி பெரேராவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வருடா வருடம் வெசாக், புத்தாண்டு போன்ற விசேட தினங்களில் ஜனாதிபதியின் பரிந்துரையின் அடிப்படையில் சிறுகுற்றம் புரிந்து நீதிமன்றங்களில் தண்டப்பணம் செலுத்த முடியாமல் தடுத்து வைக்கப்படும் கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழமை. வெசாக் தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் யாழ்.சிறைச்சாலையில் தண்டப்பணம் செலுத்த முடியாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! -மின்சார சபை
தேசப்பற்றாளர்களாகினர் தேசத்துரோகிகள்!
உணவகத்தை ஒரு மாதத்துக்கு மூடுமாறு உத்தரவு!
|
|