யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு கொவிட் தொற்றுறுதி!

Saturday, April 10th, 2021

யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு நேற்றையதினம் கொவிட் -19 தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் ஆகியவற்றில் நேற்றைய தினம் 760 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதில் 26 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டது. அவர்களில் யாழ்ப்பாணத்தில் 24 பேரும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: