யாழில் முகமூடி கொள்ளையர்கள் துணிகர கொள்ளை – மூவர் வைத்தியசாலையில்!

Sunday, June 12th, 2022

யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் முகமூடி அணிந்த ஆறு கொள்ளையர்கள் வீடு புகுந்து வாள்வெட்டு நடத்தியதில் ஐவர் படுகாயம் அடைந்த நிலையில் அதில் மூவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மந்திகை – கொடிகாமம் வீதியில் மாக்கிராயன் பகுதியில் நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மதில் பாய்ந்து உள் நுழைந்த ஆறு கொள்ளையர்கள் வீட்டிலிருந்த குடும்பத் தலைவரை முதலில் அச்சுறுத்தி வாளால் வெட்டி வீட்டிலிருந்த 10 பவுண் நகைகள் கொள்ளையிட்டுள்ளனர்.

குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் ஐவர் படுகாயம் அடைந்த நிலையில், மூவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது சரமாரியான வாள்வெட்டு மற்றும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், சுதாகரித்துக் கொண்ட உறவினர் ஒருவர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

பின் அயல் விட்டார்கள் அங்கு சென்று தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில், கொள்ளையர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் முழுமையாக முகமூடி அணிந்திருந்ததாகவும், தொலைக்காட்சி உட்படப் பல பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த வீட்டார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: