யாழில் அதிசயம்..! கண்ணீர் சிந்தும் மாதா சிலை..!

Wednesday, November 9th, 2016

யாழ். குருநகர் டேவிட் வீதிக்கு அருகே காணப்படும் பற்றிமாதா சிற்றாலய மாதா சிலையின் கண்ணில் இருந்து கண்ணீர் வெளிவருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் தொடக்கம் இவ்வாறு பற்றி மாதா உருவச் சிலையின் கண்ணில் இருந்து கண்ணீர் சிந்திய வண்ணம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த ஆலயத்தின் செபமாலை பிரார்த்தனை வழிபாடுகள் கடந்த வாரம் முதல் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறான அதிசய சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த 2008ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் குறித்த தேவாலயத்தில் மாதா சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியமை குறிப்பிடத்தக்கது.

5767-1-293614f105020cd3c311787d59e0567f

Related posts: