மே தின ரயில் சேவை:   6இலட்சத்து 25ஆயிரத்து 875 ரூபா வருமானம்!

Thursday, May 4th, 2017

மே தினத்தை முன்னிட்டு மேற்கொண்ட 2 விசேட ரயில் சேவைகள் மூலம் ரயில்வே திணைக்களத்திற்கு 6 இலட்சத்து 25 ஆயிரத்து 875 ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது.அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக கொழும்பு – கண்டி – கொழும்பு வரையிலுமான ரயில் ஒன்றும் குருநாகல் – கொழும்பு – குருநாகல் வரையிலான மற்றுமொரு ரயிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு – கண்டி – கொழும்பு ரயில் மூலம் 3இலட்சத்து 47ஆயிரத்து 875 ரூபாவும் , குருநாகல் – கொழும்பு – குருநாகல் 2இலட்சத்து 78ஆயிரம் ரூபாவும் வருமானமாக ரயில்வே திணைக்களத்திற்கு கிடைத்துள்ளது.

Related posts: