முஸ்லீம் பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை!

Wednesday, July 6th, 2016

நாட்டில் உள்ள அனைத்து முஸ்லீம் பாடசாலைகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ரமழான் பண்டிகை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைக் குறைவை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலதிக வழங்கப்பட்டுள்ள இந்த விசேட விடுமுறை தினங்களுக்கு பதிலாக ஆகஸ்ட் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே முஸ்லீம் பாடசாலைகளின் 2ஆம் தவணைக்கான 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: