முல்லைத்தீவு மாவட்டத்தில் 5901 பெண் தலைமைத்துவ குடும்பங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலர் பிரிவுகளிலும் மீள்குடியேறிய சுமார் 42,158 குடும்பங்களில் 5,901குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக காணப்படுகின்றன என மாவட்ட செயலக புள்ளி விபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 19கிராம அலுவலர் பிரிவுகளை கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் அதிகளவான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு 6 பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள 5,901பெண் தலைமைத்துவ குடும்பங்ளிலும் 4,488 குடும்பங்கள் கணவனை இழந்த குடும்பங்களாகவும், ஏனைய குடும்பங்கள் கணவனை பிரிந்து வாழும் குடும்பங்கள், காணமல் போனவர்கள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் அடங்குகின்றன. இதனை விட மனைவியை இழந்த நிலையில் 236 குடும்பங்களும் காணப்படுகின்றன.
Related posts:
கொக்குவில் கிருஷ்ணா அறநெறிப் பாடசாலையில் யோகர் சுவாமிகளின் 53 ஆவது குருபூசை நிகழ்வு!
மதுபோதையில் இருந்த இளைஞர் குழுவினரால் மாணவி மீது தாக்குதல்: இருவர் கைதாகி விடுதலை!
சேவையை நாடிவரும் மக்களுக்கு வீண் சிரமங்களையும் அலைச்சல்களையும் ஏற்படுத்தாதீர்கள் - அதிகாரிகளிடம் யாழ...
|
|