முல்லைத்தீவு பேருந்து நிலையம் அடுத்த வருடம் அமைக்கப்படும்! – மாவட்டச் செயலாளர்!

Saturday, July 23rd, 2016

முல்லைத்தீவு பஸ் நிலையம் 2017ஆம் ஆண்டில்தான் அமைக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள தற்காலிக பேருந்து நிலையம் அடிப்படை வசதிகளற்றுக் காணப்படும் நிலையில் முல்லைத்தீவு பஸ் நிலையம் அமைக்கப்படுவது தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியுள்ளோம். 2017ஆம் ஆண்டுதான் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுமெனக் கூறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி போன்ற பல மாவட்டங்களுக்கு இவ்வாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் காரணமாக அடுத்தாண்டுதான் எமது மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்து’ என தெரிவித்தார்;.

முல்லைத்தீவு தற்காலிக பேருந்து நிலையம் மாவட்டச் செயலகத்துக்கு அருகில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் இயங்கிவருகின்றது. மழை காலத்தில் இப்பகுதி சேறும் சகதியுமாக காணப்படும் நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இது தொடர்பாக ஆராயப்பட்டது.

Related posts:

சில கட்சிகளில் பெயரளவிலேயே பெண் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர் - கபே அமைப்பின் நிறைவேற்றுப...
2020 / 2021 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் ஜனவரி முதல் இணைத்துக் கொள்ளப்படுவர் - பல்கலைக்கழக மானிய...
மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையின் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன – ஐக்கிய இராச்சியத்தின் ...