மீண்டும் பெரும் அதிர்ச்சியில் முல்லைத்தீவு மக்கள்!

Sunday, July 7th, 2019

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

04 ஆம் திகதி கேப்பாபுலவு படைத்தலைமையகத்திற்கு அருகில் உள்ள பிரம்படி வயல் பகுதியில் பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது

இச்சம்பவத்தினை தொடர்ந்து அதனை அண்டிய பகுதியில் பொலிஸார், படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது நந்திக்கடல் பகுதியில் ஏ.கே 81 வகை துப்பாக்கி ஒன்று இனம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையக வாசலின் முன்னால் உள்ள மக்களின் காணி ஒன்றிற்குள் எறிகணை ஒன்றும் மக்களால் இனம் காணப்பட்டு பொலிஸாருக்கு தெரிவித்ததும் அமைவாக குறித்த இடத்தை அடையாளப்படுத்தி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts: