மாநாடு நடந்தால் இலங்கை அதில் பங்கேற்க வேண்டும் – ஜீ.எல்.பீரிஸ்!

Sunday, October 2nd, 2016

எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானில் சார்க் மாநாடு நடத்தப்படவிருந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்காமல் இருக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் தமக்கு திருப்தி கிடையாது எனவும் , மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் எடுத்தத் தீர்மானம் வருத்தமளிப்பதாகவும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை ஒன்றின் மூலமாகவே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் சார்க் மாநாடு நடத்தக்கூடிய அளவிற்கு பிராந்திய வலயத்தில் சூழ்நிலை கிடையாது என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்ததுள்ளது. வெறும் ஒரு நாளில் மாநாடு நடத்தப்பட்டாலும் இலங்கை அதில் பங்கேற்க வேண்டுமெனவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடக்தக்கதாகும்.

peries

Related posts: