மாணவர்கள் உயர் செயல்திறனை காண்பித்ததன் காரணமாகவே வெட்டுப்புள்ளி அதிகரித்தது – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Friday, February 5th, 2021

இந்த ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் பல மாணவர்கள் உயர் செயல்திறனை காண்பித்ததன் காரணமாக வெட்டுப்புள்ளி அதிகரித்ததாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளி மதிப்பிட்டு சுற்றறிக்கையின் படி இந்த ஆண்டும் வெட்டுப்புள்ளிகள் மதிப்பிடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: