மாணவர்களுக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்!

Wednesday, June 17th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மீண்டும் அடுத்த மாதம் முதல் திறக்கப்படவுள்ளன.

ஜுலை மாதம் 6ஆம் திகதி முதல் நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனால் மாணவர்களின் போக்குவரத்து தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என கல்வி அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

விசேடமாக போக்குவரத்து சேவை வழங்கும் போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். ஆசன எண்ணிக்கைகளுக்கு மாத்திரம் மாணவர்களை அழைத்து செல்ல வேண்டும்.

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் போது சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைய சமூக இடைவெளியை பின்பற்றி ஆசனங்களின் எண்ணிக்கைகளுக்கமைய மாத்திரம் மாணவர்களை அழைத்து செல்லுதல், பாடசாலை மாணவர்கள் பயணித்த வாகனங்களில் கிருமி நீக்கம் செய்தல், மாணவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருத்தல் போன்ற சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:


வேட்பாளரின் வாகனத்திலும் கட்சி அலுவலகத்திலும் மட்டுமே சுவரொட்டிகளையும் பதாதைகளையும் பயன்படுத்த முடிய...
நாட்டில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் - மூன்று மாதத்திற்குள் 38 சட்டங்களில் நாம் திருத...
யாழ்ப்பாணத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளில் மீற்றர் மானி பொருத்துவது கட்டாயம் – யா...