மருந்துகளை கிரமமாக பெற்றுக்கொள்ள அஞ்சல் திணைக்களத்தின் ஊடாக நடவடிக்கை – சுகாதார சேவை பணிப்பாளர்!

ஊரடங்கு அமுலிலுள்ள நேரத்தில் அரச வைத்தியசாலைகளில் மருந்துகளை கிரமமாக பெற்றுக்கொள்பவர்கள் தமக்கான மருந்துகள் முடிவடைந்ததும் அஞ்சல் திணைக்களத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நோயாளிகளின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் என்பன அவசியம் என்று சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக நோயாளிகள் உடனடியாக வைத்தியசாலைகளுடன் தொடர்கொண்டு தமது விபரங்களை வழங்கினால் வைத்தியசாலையின் பணியாளர் மருந்துகளை அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
அல்லது நோயாளிகள் தமது கிராமசேவகர்கள் மற்றும் பொதுசுகாதார அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தமது விபரங்களை தெரிவித்தால் அவர்கள் சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகளுக்கு அறிவிப்பார்கள் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பெண்களுக்கு உரிய மதிப்பினை வழங்குவதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம்: யாழ். இந்தி...
கடும் வரட்சி - 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
வங்கிக் கடன் சலுகைகளை டிசம்பர் 31 வரை நீடிக்க மத்திய வங்கி முடிவு!
|
|