பொலிஸ் நிலைய உப பரிசோதகர் மரணம்!

Sunday, September 10th, 2017

முள்ளியவளை பொலிஸ் நிலைய உப பரிசோதகர் ஒருவர் பொலிஸ் நிலைய விடுதியில் இருந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முள்ளியவளை பிரதேசத்தில் உப பரிசோதகராக கடமையாற்றிய டி.எம்.ஜ.பண்டார நாயக்க என்ற பொலிஸ் அதிகாரியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த பொலிஸ் நிலைய உப பரிசோதகருக்கு காலை உணவு வழங்குவதற்காக சக பொலிஸ் உத்தியோகஸ்தரொருவர் விடுதிக்குச் சென்றுள்ளார்.

அந்த உப பரிசோதகர் நிலத்தில் விழுந்து கிடப்பதை அவதானித்துள்ளார்.இந்த நிலையில் உடனடியாக அவரை மாஞ்சோலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்போதே அவர் உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts: