பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகள் அபிவிருத்தி – அமைச்சர் ராஜித!

Tuesday, January 31st, 2017

பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் மாகாணங்களிலுள்ள தோட்ட வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவிருப்பதாக அமைச்சர் கூறினார். மாகாண சுகாதார அமைச்சர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே அமைச்சர் இந்த விடயத்தை வெளியிட்டார்.

நாடு பூராகவும் உள்ள 20 தோட்டப்புற வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யவென சுகாதார அமைச்சு 2016ம் ஆண்டில் 41 கோடி ரூபாவை ஒதுக்கியிருந்ததாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

rajitha2-720x480

Related posts: