பெப்ரவரி நடுப்பகுதியில் மூன்று இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படும் – சீனத் தூதரகம் தெரிவிப்பு!

Wednesday, January 27th, 2021

இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மிகப்பெரிய உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவைடன் ஒப்பிடும்போது தடுப்பூசியின் உற்பத்தி திறன் இன்னும் குறைவாக இருந்தாலும் நன்கொடை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினோபார்ம் என்னும் சீனா தேசிய மருந்துக் குழு நிறுவனம் தயாரிக்கும் இந்த தடுப்பூசியை பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு ஒப்படைக்க எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நோயைத் தடுப்பதில் 79-86 வீத செயற்திறன், கடுமையான மற்றும் மிதமான நோய்களைத் தடுப்பதில் 100 வீத செயற்திறன் கொண்ட சினோபார்ம் தடுப்பூசி பல நாடுகளில் ஏற்கனவே மூன்றாம் கட்ட சோதனைகளை கடந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு செயலற்ற தடுப்பூசி என்பதால் அதை குளிர்சாதன பெட்டியில் 2-8 டிகிரி செல்சியஸ் எளிதாக சேமித்து கொண்டுசெல்ல முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செர்பியா, எகிப்து, பஹ்ரைன், ஜோர்தான், ஈராக், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த தடுப்பூசி பொது பயன்பாட்டிற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளது என்றும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

.

000

Related posts:


சிமெந்து மற்றும் கம்பி போன்றவற்றின் விலையை நிர்ணயிக்க தீர்மானம் - நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவிப...
மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் - நிலைப்பாட்டில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மிகவும் உறுதியாகவே உள்ளத...
அனைத்து நபர்களின் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பொலிஸாருக்கு ...