பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தலைமையகம் நிராகரிப்பு!

Saturday, February 20th, 2021

இலங்கை பொலிஸ் பிரிவில் பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அறிவித்துள்ளது.

பெண் பொலிஸ் அதிகாரியின் உரிமை மீறப்படும் வகையில் செயற்படுவதாகவும் சில அதிகாரிகள் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை நிராகரித்து பொலிஸ் தலைமையகம் அறிக்கையினை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதல் அரச நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளில் நூற்றுக்கு 15 சதவீதமான பதவிகள் பெண் அதிகாரிகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு அமைய இலங்கை காவல்துறை பதவிகளில் 15 சதவீதமான இடங்கள் பெண் அதிகாரிகளுக்கு வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: