புற்றுநோய் மருந்துக்கு தட்டுப்பாடு –  பணிப்பாளர் எச்.எம்.எச்.ரூம்!

Monday, April 3rd, 2017

 “அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 53 வகையான மருந்துகள் மார்ச் முதல் செப்டெம்பர் வரையான காலப் பகுதியில் காலாவதியாவதாக வெளியான தகவலில் உண்மையில்லை” என, கூட்டுதாபனத்தின் பணிப்பாளர் எச்.எம்.எச்.ரூம் தெரிவித்துள்ளார்.

மேலும், குறிப்பிட்ட தினத்தின் பின்னர் புற்றுநோயாளர்களுக்கு ஊசி மூலம் ஏற்றப்படும் மருந்து வகையில் மாத்திரமே தட்டுப்பாடு நிலவும் எனவும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“பல மருந்துகள் 2 வருடங்களுக்குப் பிறகே காலாவதியாகும். இருந்தும் சில ஊசி மருந்து வகைகள், மூக்கினால் உள்ளிழுப்பதற்கான மருந்து வகைகள் 12இல் இருந்து 18 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் காலாவதியாகும்.

இந்நிலையில், மார்ச் மாதத்தில் இருந்து செப்டெம்பர் மாதம் வரை காலாவதியாகும் மருந்து வகைகளில் ஒரே ஒரு வகையான மருந்து மட்டுமே உள்ளது. அது புற்றுநோயாளர்களுக்கு ஊசி மூலம் ஏற்றப்படும் மருந்தாகும்.
இவ்வகையான மருந்துகளின் தேவை தொடர்பாக ஆராய்வது கடினமாகும்.

ஆனால், மருந்துகளை சேமித்து வைக்கும் அதே​வேளை, முடிவுறும் மருந்துகளை தொடர்ந்தும் களஞ்சியப்படுத்துவதே நமது கூட்டுத்தாபனத்தின் கடமையாகும். இருப்பினும், ஏனைய மருந்து வகைகள் காலாவதியாகும் தினத்தை எட்டியபோதிலும் அதனை குறித்த காலத்துக்குள் விற்கப்படும்” என்றும் தெரிவித்தார்

Related posts: