புகைப்பிடிப்போரை அதிகம் தாக்கும் கொரோனா வைரஸ் – எச்சரிக்கும் கலிபோர்னிய பல்கலைக்கழகமொன்றின் ஆய்வு!

Wednesday, May 13th, 2020

புகைப்பிடிப்பவர்கள் மற்றும் சிகரட் பயன்படுத்துவோர் உட்பட ஏற்கனவே புகைப்பிடித்துள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் தனது தீவிரத்தை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதன் மூலம் உயிரிழக்கும் ஆபத்து குறிப்பிடத்தக்களவு அதிகம் எனவும் கலிபோர்னியாவின் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது

புகைப்பிடித்தல் கொரோனா வைரஸ் நோய் உச்சமடைவதில் குறிப்பிடத்தக்களவு ஆபத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் புகையிலை கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மற்றும் ஆய்வு நிலையத்தின் மருத்துவர் பேராசிரியர் ஸ்டென்டன் கிளென்டிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

19 ஆய்வு கட்டுரைகள் ஊடாக ஆராயப்பட்ட இந்த ஆராய்ச்சியில் புகைப்பிடிக்காத 17.6 வீதத்துடன் ஒப்பிடும் போது புகைப்பிடிப்போரில் 30 வீதமானோருக்கு கொரோனா வைரஸ் மிக மோசமான வகையில் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஆபத்து அதிகம் இருப்பதாக இதன் மூலம் தெரியவந்துள்ளது.

Related posts: