பிராந்தியப் புரிந்துணர்வு, நல்லுறவை மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, July 29th, 2021

பிராந்தியப் புரிந்துணர்வு மற்றும் நல்லுறவை மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் பலரை சந்தித்த போதே நிதி அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் இந்நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் இருதரப்பு நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறை மற்றும் புரிந்துணர்வுடன் செயற்படுவது குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை நிதியமைச்சில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், பிரித்தானியா, சவுதி அரேபியா, எகிப்து மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

கொவிட் தொற்றுக்கு மத்தியில் 4 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை அடைவதற்கு இலங்கையினால் முடிந்தமை குறித்து பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்..

பாகிஸ்தானின் பதில் உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் கருத்து தெரிவிக்கையில், நாட்டின் கால்நடை வளர்ப்பில்; கிராமிய மட்டத்தில் மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை வழங்குவதற்கும் அதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் பாகிஸ்தான் அரசாங்கம் செயற்படுமென்றும் கூறினார்.

அத்துடன் உலக சுகாதார அமைப்பின் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக சவுதி அரேபியத் தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: