பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவிற்கு ஒரு வார தடை!

Thursday, March 9th, 2017

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, ஒரு வார கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற விதிமுறைகளை மீறி சபையில் கூச்சல் குழப்பம் விளைவித்தமை மற்றும் அவை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துகொண்டமை தொடர்பில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த, ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவைத் தலைவர் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவினால் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.

இந்த யோசனையை, வாக்கெடுப்பு மூலம் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்ததையடுத்து, மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில்

யோசனை 63 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த யோசனைக்கு ஆதரவாக 85 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் வழங்கப்பட்டன.

விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதற்கு கோரிய யோசனையை சபாநாயகர் மறுத்ததை அடுத்து ஏற்பட்ட சலசலப்பின் போதே முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்ற விதிமுறைகளை மீறி நடந்துகொண்டார். இதனை அடுத்து, தினேஷ் குணவர்தனவை சபையில் இருந்து அகற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டதோடு, அவையை 10 நிமிடத்திற்கு ஒத்திவைத்தார்.

இவ்வாறு சபை நடவடிக்கைகள் 3 முறை ஒத்திவைக்கப்பட்டதோடு, தினேஷ் குணவர்தனவை சபையிலிருந்து வெளியேற்றுமாறு பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, அவசியம் ஏற்படுமிடத்தில், பொலிசாரின் உதவியைப் பெறுமாறும் தெரிவித்தார்.

ஆயினும் தினேஷ் குணவர்தன அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் இதனையடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வாக்கெடுப்பின்போது, 114 பேர், சபையில் இருக்கவில்லை என்பதோடு, வாக்கெடுப்பில் மூவர் பங்கெடுக்கவில்லைகுறித்த வாக்கெடுப்பு நடவடிக்கையின்போது, தினேஷ் குணவர்தன எம்.பி. அவையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: