பாண், பணிஸ் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு!

Tuesday, September 18th, 2018

பாண், பனிஸ் உள்ளிட்ட அனைத்து உணவுப்பொருட்களின் விலைகளை 5 ரூபாயால் அதிகரிக்க, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெதுப்பக பொருட்களின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் ஃபாம் எண்ணெய் ஆகியவற்றிற்கு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய வரி காரணமாகவே, அவற்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பையடுத்து, கடந்த 03 ஆம் திகதி பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலையை அதிகரிப்பதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: