பாடசாலை மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியரும் மாணவர்களும் காயம்!

Wednesday, June 15th, 2022

வெலிமடை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தென்னை மரமொன்று  முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மாணவர்களும் ஆசிரியரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்த 09 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பாடசாலை ஆய்வுகூடத்தின் மீது இன்று(15) முற்பகல் 9.45 மணியளவில் தென்னை மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

Related posts: