பாடசாலை மாணவர்களுக்கான தேசியரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் முன்னெடுப்பு!

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான தேசியரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணம் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதிகரித்து வரும் பாடசாலை மாணவர்களின் இடைவிலகலை தவிர்ப்பதற்கும் மாணவர்களிடையே விழிப்புணர்வூட்டுமுகமாக குறித்த செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த செயற்றிட்டமானது வடக்கு கிழக்கு மலையகம் தழுவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தைச் சேர்ந்த பயிற்சி பெற்ற மாணவ ஆளணியினரால் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா தாக்கத்தின் எதிரொலி : இலங்கை களஞ்சியங்களில் நிரம்பி வழியுகிறது எரிபொருள்கள் – பெற்றோலியக் கூ...
ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி - சவுதி அரசாங்கம் அறிவிப்பு!
எமது நாட்டில் தான் ஒரு மாணவர் கற்க வேண்டிய பாடத்தை அரசாங்கம் தீர்மானிக்கிறது - இந்த நிலை மாற்றியமைக...
|
|