பருத்தித்துறையில் மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது!

Friday, April 30th, 2021

பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளர்ஃ

காங்கேசன்துறை பிராந்திய சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் இந்தக் கைது நடவடிக்கையை நேற்று முன்னேடுத்தனர்.

பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த 20, 31 மற்றும் 38 வயதுடைய சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து 6 கிலோ கிராம், 2 கிலோ கிராம் மற்றும் 500 கிராம் பொதி என 8 கிலோ 500 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: